This Article is From Aug 05, 2020

“ராமர் என்றால் அன்பு”; ராமர் கோயில் குறித்து ராகுல் காந்தி டிவிட்!

ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் ஆழத்தில் இருக்கும் மனித நேயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ராமர் என்றால் அன்பு அவர் ஒருபோதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை.

“ராமர் என்றால் அன்பு”; ராமர் கோயில் குறித்து ராகுல் காந்தி டிவிட்!

காங்கிரசின் ராகுல் காந்தி இன்று ராமரைப் பாராட்டி ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

ஹைலைட்ஸ்

  • இந்த விழாவிற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை
  • RSS தலைவர் மோகன் பகவத் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்
  • ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 19 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ரமர் கோயில் கட்டுமான பணிக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவிற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. RSS தலைவர் மோகன் பகவத் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்.

இந்த விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார சபைக்கு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரியங்கா காந்தியை தொடர்ந்து ராகுல் காந்தியும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து ஹிந்தியில் டிவிட் செய்துள்ளார். இதில், “ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் ஆழத்தில் இருக்கும் மனித நேயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ராமர் என்றால் அன்பு அவர் ஒருபோதும் வெறுப்பில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் கருணை, அவர் ஒருபோதும் கொடுமையில் வெளிப்படுவதில்லை. ராமர் என்றால் நீதி அவர் ஒருபோதும் அநீதியின் மூலம் வெளிப்படுவதில்லை.” என டிவிட் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, 40 கிலோ எடைக் கொண்ட வெள்ளி செங்கல்லை அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த விழாவில் உத்தரப்பிரதேச ஆளுநர் மற்றும் பிற விஐபிகள் உட்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், “நம்முடைய பொறுப்புகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பதை ராமர் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். எதிர்ப்பைத் தாண்டி எவ்வாறு அறிவுப் பாதையை பின்பற்றுவது என்பதை அவர் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ராமரின் கொள்கைகள் முன்னேற நமக்கு ஊக்கமளிக்கின்றன.” என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.