This Article is From Jan 12, 2019

கைது செய்யப்படுவாரா சிபிஐ நெ.2 ராகேஷ் அஸ்தனா..?- அதிரடி தீர்ப்பால் நெருக்கடி!

ராகேஷ் அஸ்தனா, சிபிஐ துணை எஸ்.பி தேவேந்தர் குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கைது செய்யப்படுவாரா சிபிஐ நெ.2 ராகேஷ் அஸ்தனா..?- அதிரடி தீர்ப்பால் நெருக்கடி!

அஸ்தனாவை கைது செய்ய இருந்த இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

New Delhi:

லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனா மீது விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகேஷ் அஸ்தனா, சிபிஐ துணை எஸ்.பி தேவேந்தர் குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. 

மேலும், அஸ்தனாவை கைது செய்ய இருந்த இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

அஸ்தனா மீது குற்றம் சுமத்தி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி சம்பந்தப்பட்ட வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதிஷ் பாபு சனாவும், சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த வழக்கிலிருந்து தனது பெயரை நீக்க சனா, அஸ்தனாவிடம் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில்தான் அஸ்தனா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 


 

.