This Article is From May 21, 2020

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி!

1991ம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி!

ராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி!

New Delhi:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சிலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் தாயார், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் ஆறாவது பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டிலே இளம் பிரதமராக ராஜீவ் காந்தி 40 வயதிலே பிரதமர் பதவி வகித்தார். 

இதைத்தொடர்ந்து, 1991ம் ஆண்டு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனால், ஆண்டுதோறும் அவரது நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

.