This Article is From Jan 15, 2020

Rajini vs Udhayanidhi: “தலைசுத்திருச்சுல…”- Rajini-க்கு உதயநிதி ஸ்டாலினின் பதிலடி!!

Rajini vs Udhayanidhi: “முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து..."

Rajini vs Udhayanidhi: “தலைசுத்திருச்சுல…”- Rajini-க்கு உதயநிதி ஸ்டாலினின் பதிலடி!!

Rajini vs Udhayanidhi: "பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்"

Rajini vs Udhayanidhi: சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், துக்ளக் 50வது ஆண்டு விழா மலரை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட்-டாபிக்.

நடிகர் ரஜினிகாந்த் தனது சிறப்புரையின் போது, “சோ ஒரு ஜீனியஸ். ஜீனியஸ் என்பதை அடையாளப்படுத்த சில ஆண்டுகளாகும். தான் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க சோ எடுத்த துறை பத்திரிகைத் துறையாகும். அவரது ஆயுதம் துக்ளக். முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம். 

சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது; தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை. சோவை பெரிய ஆளாக்கியது பக்தவத்சலம், கலைஞர் ஆகிய இருவர்தான். எமர்ஜென்சியை எதிர்த்ததால் தேசிய அளவில் அறியப்பட்டார் சோ. சோவைப் போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. 

s7ml5f7c

கவலைகள் அன்றாடம் வரும்; அதை நிரந்திரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில்தான். கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நோயாளி. தற்காலிகமாக்கிக் கொண்டால் அறிவாளி.

பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்” என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி அமர்ந்தார். 

திமுகவை சீண்டிய இந்தப் பேச்சுக்கு அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், “முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்,” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

.