This Article is From Oct 08, 2018

பொது இடத்தில் சிறுநீர் கழித்த ராஜஸ்தான் எம்.எல்.ஏ; விசித்திர விளக்கம்!

ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ-வான ஷாம்பு சிங் கடேசர், பாஜக பிரசாரக் கூட்டம் நடந்த இடத்துக்குப் பக்கத்தில் சிறுநீர் கழித்துள்ளார்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த ராஜஸ்தான் எம்.எல்.ஏ; விசித்திர விளக்கம்!

திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது என்பது பல ஆண்டுகளாக நாம் பினபற்றி வரும் பழக்கம், கடேசர்

Ajmer:

ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ-வான ஷாம்பு சிங் கடேசர், பாஜக பிரசாரக் கூட்டம் நடந்த இடத்துக்குப் பக்கத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அப்படி அவர் செய்யும் போது, அது படமாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அந்தப் படம் வைரலான நிலையில், தனது செயல் குறித்து விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார் எம்.எல்.ஏ கடேசர்.

ராஜஸ்தானில் பாஜக பிரசாரக் கூட்டத்தின் போது, அம்மாநில முதல்வர் வசுந்துரா ராஜே படம் பொறித்த ஒரு பதாகை பக்கத்தில் தான் கடேசர் சிறுநீர் கழித்துள்ளார். பிரதமர் மோடி, தொடர்ந்து ‘க்ளீன் இந்தியா’ பிரசாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், கடேசரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும் மோடி, ராஜஸ்தானில் திறந்த வெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டு விட்டது என்று தொடர்ந்து கூறி வரும் நிலையில், கடேசரின் செயல் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

தனது செயல் குறித்து கடேசர், ‘திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது என்பது பல ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் பழக்கம். திறந்த வெளியில் மலம் கழித்தல் என்பதும் சிறுநீர் கழித்தல் என்பதும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். மலம் கழித்தலால், பல்வேறு நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆனால், மறைவான இடத்தில் சிறுநீர் கழித்தல் என்பது அப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தாது. பிரசாரக் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் கழிவறை வசதியே இல்லை. நான் காலையிலிருந்து பிரசாரத்துக்குத் தேவையான வேலைகளை பார்த்து வந்தேன். அதனால் தான் சிறுநீர் கழித்தேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார். 

.