This Article is From Aug 11, 2020

அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சி மன்னித்தால், அவர்களை வரவேற்போம்: அசோக் கெலாட்!

Rajasthan Political Crisis: அதிருப்தி எம்எல்ஏக்களை மன்னிக்க கட்சித் தலைமை முடிவு செய்தால் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன் என்றார். 

அதிருப்தி எம்எல்ஏக்களை கட்சி மன்னித்தால், அவர்களை வரவேற்போம்: அசோக் கெலாட்!

New Delhi:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் ராகுல் காந்தியை சந்தித்து சமரசம் செய்து கொண்டு மீண்டும் கட்சிக்கு திரும்புவதால் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. 

அவரிடம், பயற்றவர் என்று நீங்கள் கூறிய ஒருவருடன் மீண்டும் உங்களால் எப்படி பணிபுரிய முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். 

மேலும், அவர் தன் மீது கோபம் கொண்ட எம்எல்ஏக்களின் குறைகளை நிவர்த்தி செய்வது தனது பொறுப்பு என்றும் கூறினார். 

அதிருப்தி எம்எல்ஏக்களுடனான மோதல் குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் கேள்வி எழுப்பியபோது, அதிருப்தி எம்எல்ஏக்களை மன்னிக்க கட்சித் தலைமை முடிவு செய்தால் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன் என்றார். 

துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட், ஒரு மாதத்திற்கு பிறகு இன்று ராஜஸ்தான் திரும்புகிறார். அவர் மீண்டும் திரும்புவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற, 19 அதிருப்தி எம்எல்ஏக்களின் புகார்களை தீர்ப்பதற்காக பிரியங்காக காந்தி உள்ளிட்டவர்கள் அடங்கிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

"எந்த எம்.எல்.ஏக்களும் என் மீது கோபம் கொண்டால், அதனை சரி செய்ய வேண்டியது என் பொறுப்பு. கடந்த காலங்களில் இருந்து இதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன், இப்போது இதைச் செய்வேன்" என்று அசோக் கெஹ்லோட் கூறினார், ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏன் சென்றார்கள், "என்ன வாக்குறுதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. 

கடந்த மாதம் அசோக் கெலாட் தனது ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் பேரம் பேசியதாக சச்சின் பைலட் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சச்சின் பைலட்டை, தோற்றத்தாலும், ஆங்கில பேச்சாலும் ஊடங்களை கவர்ந்தவர் என்றும், அவர் பயன்றறவர் என்றும் அசோக் கெலாட் விமர்சித்திருந்தார். 

.