This Article is From Jul 24, 2020

சச்சின் பைலட் அணியினர் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: உயர் நீதிமன்றம்

தொடர்ந்து, வழக்கில் மத்திய அரசையும் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சச்சின் பைலட் அணியினர் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: உயர் நீதிமன்றம்

Rajasthan Political Crisis: சச்சின் பைலட்டுகு18 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

New Delhi/Jaipur:

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கில் மத்திய அரசையும் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதனால், தகுதிநீக்கத்திற்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு மீதான முடிவு வரும் இதே நிலை நீடிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் இன்று காலை தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசையும் வழக்கில் சேர்க்ககோரி கடைசி நேரத்தில் சச்சின் பைலட் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் தாமதமானது. ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என்றும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் கூறியது. எனினும், முதல்வர் அசோக் கெலாட் நேற்றைய தினம்  கூறும்போது, தனது பெரும்பான்மையில் உறுதியாக இருப்பதாகவும், சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்றும் கூறினார். 

முதல்வர் அசோக் கெலாட் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அந்த கூட்டங்களில் பங்கேற்காததால், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்கள் அனைவரையும் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து, தகுதிநீக்கத்திற்கு எதிராக சச்சின் பைலட் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில், மத்திய அரசு தரப்பு முடிவையும் தெரிவிந்துக்கொள்ளும் வகையில், நீதிமன்றம் இந்த வழக்கில் மத்திய அரசை மனுதாரராக சேர்த்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது என சபாநாயகரை நீதிமன்றும் கோரியுள்ளது. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டபோதிலும், அதுதொடர்பாக எந்த பதிலும் இல்லை. 

வீடியோ-கான்பரன்சிங் மூலம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகரின் மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு "நீண்டகால விசாரணை" தேவை, ஏனெனில் அது ஜனநாயகம் தொடர்பான "பெரிய கேள்வி" எழுப்புகிறது. எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே அதன் இறுதி முடிவுக்கு உட்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

சச்சின் பைலட் அணியினருக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவையும் அவர் சந்தித்தார். 

விரைவில் சட்டமன்றத்தை கூட்டுவோம். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒன்றுமையுடன் இருக்கிறோம் என்றும் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காங்கிரஸ் எந்த குழுப்பமும் இல்லாமல் இருக்கும் எம்எல்ஏக்களுடன் கலந்துகொள்ளும் என்று தெரிகிறது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 101 உறுப்பினர்களை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் பலத்தை மட்டுமே அசோக் கெலாட் தரப்பு கொணநடுள்ளது. அதனால், சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறையும் அதனால், கெலாட் தரப்பு எளிதில் வெற்றி பெறலாம். 

ஆனால், தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து காங்கிரஸூக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அதிகாரத்தில் நீடிப்பது கடினமாகும். 

.