This Article is From Jul 17, 2020

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்.எல்.ஏ மீதான நடவடிக்கை ஒத்திவைப்பு!!

தகுதி நீக்கத்தினை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் இவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை வரும் செவ்வாய்க் கிழமை வரை ஒத்திவைக்க சபாநாயகரை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதன்கிழமை மாலை, சச்சின் பைலட் மற்றும் பிற கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர்.

Jaipur:

ராஜஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள், தகுதி நீக்கத்தினை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில் இவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை வரும் செவ்வாய்க் கிழமை வரை ஒத்திவைக்க சபாநாயகரை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திரமான கருத்து தெரிவித்தலை கட்சிக்கு எதிரான நடவடிக்கை என வரையறுக்க முடியாது என சச்சின் பைலட் குழுவினை நீதிமன்றத்தினை நாடியிருந்தனர். முன்னதாக அசோக் கெஹ்லாட் அரசாங்கத்தினை கலைப்பதற்கு சதி செய்ததாக அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவுடன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசோக் கெஹ்லோட் அரசாங்கத்திற்கு எதிராக பாஜகவுடன் சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் மீது பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.