This Article is From Jul 24, 2020

சட்டமன்றம் கூடுவது குறித்த முடிவு எடுக்காத ஆளுநர்! ராஜஸ்தான் அரசியலில் உட்சபட்ச குழப்பம்!!

“எங்களுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது, திங்கள்கிழமை முதல் சட்டமன்றம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என என்று கெஹ்லாட், ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்

சட்டமன்றம் கூடுவது குறித்த முடிவு எடுக்காத ஆளுநர்! ராஜஸ்தான் அரசியலில் உட்சபட்ச குழப்பம்!!

நீதிமன்றத்தில் பின்னடைவு: காங்., எம்எல்ஏக்களுடன் ஆளுநர் இல்லம் செல்லும் அசோக் கெலாட்!

Jaipur:

சமீபக் காலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் தற்போது உச்சக் கட்டத்தினை எட்டியுள்ளன. ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மாநில துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மீது எவ்வித நடவடிக்கையையும் காங்கிரஸ் மேற்கொள்ளக்கூடாது என இன்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முயன்று வருகிறார்.

திங்கட்கிழமையன்று சட்டமன்றத்தை கூட்ட முதல்வர் கோரிக்கை வைத்திருக்கக்கூடிய நிலையில், ஆளுநர் இது குறித்து எவ்வித முடிவையும் மேற்கொள்ளவில்லையென்று முதல்வர் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை பலத்தினை நிறுவ சட்டமன்றத்தை கூட்ட நாங்கள் கோரிக்கை விடுத்தோம் இந்நிலையில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இது குறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவருக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

“நேற்று ஒரு கடிதத்தில் ஒரு அமர்வை அழைக்குமாறு நாங்கள் அவரைக் கேட்டுக்கொண்டோம், நாங்கள் இரவு முழுவதும் காத்திருந்தோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதுபோன்ற ஒரு எளிய செயல்முறையை தாமதப்படுத்த எந்த வகையான சக்திகள் அவரை கட்டாயப்படுத்துகிறது என தெரியவில்லை.” என காங்கிரஸ் முதல்வர் அசோக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சரும் சுமார் 100 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பலம் காண்பிப்பதற்காக பேருந்துகளில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.

“எங்களுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது, திங்கள்கிழமை முதல் சட்டமன்றம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என என்று கெஹ்லாட், ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, “நான் இன்னும் முடிவு செய்யவில்லை. நான் என்ன செய்தாலும் அது விதிகளின்படி இருக்கும்.” என என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என்றும், உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க முடியாது என்றும் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றம் கூறியது. எனினும், முதல்வர் அசோக் கெலாட் நேற்றைய தினம்  கூறும்போது, தனது பெரும்பான்மையில் உறுதியாக இருப்பதாகவும், சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்றும் கூறினார். 

இதுதொடர்பாக ராஜ்பவன் வட்டாரங்கள் என்டிடிவியிடம் கூறியதாவது, கடந்த 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து,, சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் அப்போது ஆலோசிக்கப்பட்டதாகவும், எனினும் எந்த தேதியும் குறிப்பிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒருபக்கம் சச்சின் பைலட் தரப்பு நீதிமன்ற தீர்ப்பை காட்டி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. 

இதனிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், விரைவில் சட்டமன்றம் கூட்டம் கூட்டப்படும் என்றும், தனக்கு பெரும்பான்மை உள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதல், சில அதிருப்தி எம்எல்ஏக்களும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். அவர்களின் ஆதரவு இல்லையென்றாலும், எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. அதனை நாங்கள் நிரூபிப்போம் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், கெலாட் கூறும்போது, சில அதிருப்தி எம்எல்ஏக்கள் எங்கள் வர தாயாராக இருக்கின்றனர். அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு தங்களால் வெளியே வர முடியவில்லை என்றும், பாதுகாப்புக்காக குண்டர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதனால், எம்எல்ஏக்கள் வெளியில் வரும் பட்சத்தில் சிலர் எங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவையான 101 உறுப்பினர்களை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவின் பலத்தை மட்டுமே அசோக் கெலாட் தரப்பு கொணநடுள்ளது. அதனால், சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டால், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறையும் அதனால், கெலாட் தரப்பு எளிதில் வெற்றி பெறலாம். 

ஆனால், தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால், அவர்கள் தொடர்ந்து காங்கிரஸூக்கு எதிராக வாக்களிக்கலாம். அதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அதிகாரத்தில் நீடிப்பது கடினமாகும். 

.