This Article is From Aug 14, 2019

“எந்த கண்டிஷனும் போடல… எப்போ வரட்டும்?” - ஜம்மூ காஷ்மீர் ஆளுநருக்கு ராகுலின் செக்!

"உங்கள் அழைப்பை ஏற்று ஜம்மூ காஷ்மீருக்கு வந்து மக்களைப் பார்க்க விரும்புகிறேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வரத் தயார். எப்போது வரட்டும்?”

“எந்த கண்டிஷனும் போடல… எப்போ வரட்டும்?” - ஜம்மூ காஷ்மீர் ஆளுநருக்கு ராகுலின் செக்!

ஆளுநர் மாலிக், “ராகுல் ஏகப்பட்ட நிபந்தனைகள் போடுகிறார். அவருக்கு அழைப்பில்லை” என்று உஷ்ணமானார். 

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததற்கு, அம்மாநில ஆளுநர், சத்யபால் மாலிக், “நான் வேண்டுமானால் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன். வந்து உண்மையை நிலைமையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், “ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடன் வரும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு ஆளுநர் மாலிக், “ராகுல் ஏகப்பட்ட நிபந்தனைகள் போடுகிறார். அவருக்கு அழைப்பில்லை” என்று உஷ்ணமானார். 

இதைத் தொடர்ந்து ராகுல், “டியர் மாலிக் ஜி, எனது கருத்துக்கு நீங்கள் கூறிய பின்னூட்டத்தைப் பார்த்தேன். உங்கள் அழைப்பை ஏற்று ஜம்மூ காஷ்மீருக்கு வந்து மக்களைப் பார்க்க விரும்புகிறேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வரத் தயார். எப்போது வரட்டும்?” என்று ட்வீட்டியுள்ளார். 

கடந்த திங்கட் கிழமை மாலிக், “ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும். அதற்கு அழைப்பு கொடுக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு விமானம் அனுப்புகிறேன். அதன் மூலம் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு பேசவும். நீங்கள் மிகவும் பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்படி பேசக் கூடாது” என்று தெரிவித்தார். 

ஒரு வாரத்துக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசு. மேலும் ஜம்மூ காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் அங்கு ஸ்திரத்தன்மையற்ற நிலைமை இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 
 

அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த ஆளுநர் மாலிக், “ 370வது சட்டப் பிரிவு ரத்து என்பது அனைவருக்குமானது. அது குறித்து மத ரீதியில் யோசிப்பது தவறு. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் தவறான தகவல்களை அளித்து வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளும் திறந்துதான் இருக்கின்றன. அங்கு யாராவது குண்டு காயங்களுடன் இருக்கிறார்களா என்று பார்த்து நிரூபிக்கவும்” என்று விளக்கினார்.

.