மல்லையாவின் எஸ்கேப்புக்கு பின்னால் இருப்பது பிரதமர் மோடி… ராகுல் தாக்கு!

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மல்லையாவின் எஸ்கேப்புக்கு பின்னால் இருப்பது பிரதமர் மோடி… ராகுல் தாக்கு!

ராகுல் காந்தி, மல்லையா விவகாரத்தில் பாஜக தலைவர்களை தாக்கி வருகிறார்.


New Delhi: 

பண மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்குத் தப்பியோடிய விஜய் மல்லையாவுக்கு பிரதமர் மோடி உதவி செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்.

சில நாட்களுக்கு முன்னர் மல்லையா, ‘நாட்டை விட்டு வெளியேறும் முன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன்’ எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார். மேலும் மல்லையா, ‘என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், நீதிமன்றம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

vo5j3bdராகுல் காந்தியின் ட்வீட்டில், லுக் அவுட் நோட்டீஸ் மாற்றம் குறித்து பேசியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், ‘நாடாளுமன்றத்தில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அருண் ஜெட்லியை சந்தித்து மல்லையா பேசியுள்ளார். இதுபற்றி நாட்டு மக்களுக்கு நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு கிரிமினலை அவர் ஏன் சந்தித்து பேச வேண்டும். மல்லையாவுடன் அவர் என்ன பேசினார் என்பதை ஜெட்லி தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இன்று ராகுல், ‘மல்லையாவின் எஸ்கேப்புக்கு, சிபிஐ தான், லுக் அவுட் நோட்டீஸை மாற்றி வெளியிட்டு உதவி செய்துள்ளது. சிபிஐ, பிரதமர் மோடியிடம் தான் நேரடியாக ரிப்போர்ட் செய்கிறது. எனவே, இப்படிப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸில் பிரதமரின் அனுமதி இல்லாமல் மாற்றம் செய்திருக்காது’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................