This Article is From Jan 01, 2019

ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: அருண் ஜெட்லியின் சவாலை ஏற்றது காங்கிரஸ்

குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 முதல் கூட்டப்பட்டது. அதில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: அருண் ஜெட்லியின்  சவாலை ஏற்றது காங்கிரஸ்

ஹைலைட்ஸ்

  • Congress alleges Rafale deal mired in corruption and crony capitalism
  • Arun Jaitley said Congress "running away" from debate in parliament
  • Mallikarjun Kharge said the party accepts the challenge
New Delhi:

பாராளுமன்றத்தில் ரபேல் ஜெட் ஒப்பந்தம் குறித்தான விவாத்திலிருந்து காங்கிரஸ் ‘ஓடி'விடுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிஜார்ஜுன் கார்கே ‘காங்கிரஸ் இந்த சவாலை ஏற்கிறது' என்று கூறியிருந்தார்.அதன்படி ஜனவரி 2 அன்று  ரபேல் ஒப்பந்தம் குறித்தான ஒப்பந்தத்திற்கு சபாநாயகர் சுமித்ரா மாகஜனிடம் இதற்கு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். “ஜெட்லி கொடுத்த சேலன்ஞ் ஏற்கிறோம்.... ஜனவரி 2 விவாதத்திற்கு தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கான  ஒப்பந்த்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கூறி வந்தார். பிஜேபி அரசு பாதுகாப்புத் துறையில் எந்தவொரு அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிபஃன்னெஸ்  நிறுவனத்திற்கு 30,000 கோடி இந்த ஒப்பந்த வழங்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் லிமிடெட்டிற்கு வழங்காமல் அம்பானியின் நிறுவனத்திற்கு கொடுத்ததை குற்றம் சாட்டி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக முடிவு எடுப்பதில் சந்தேககிக்க எந்தவொரு காரணமும் இல்லை என்று கூறி அது தொடர்பான மனுக்களை விசாரிக்காமல் நிராகரித்தது. அனில் அம்பானி நிறுவனத்திடம் அதிகபட்ச விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டிற்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டதற்கு எந்தவொரு வணிகம் சார் நோக்கத்திற்கான சான்றுகள் ஏதுமில்லை என்றும் அறிவித்தது. 

ரஃபேல் வழக்கு குறித்தான செய்திகளை வெளியிட்டதற்காக அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமன் NDTVக்கு ரூ. 10,000 கோடிக்கு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

.