This Article is From Oct 20, 2018

பஞ்சாப் விபத்து: ‘ரயிலை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது!’- ஓட்டுநர் தகவல்

பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாடத்தின் போது, எதிர்பாராத விதமாக கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது

பஞ்சாப் விபத்து: ‘ரயிலை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது!’- ஓட்டுநர் தகவல்

இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது

Amritsar:

பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாடத்தின் போது, எதிர்பாராத விதமாக கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய ரயிலை இயக்கிய, ஓட்டுநரிடம் பஞ்சாப் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது குறுத்து பஞ்சாப் போலீஸ், ‘நேற்று நடந்த விபத்தின் போது ரயிலை இயக்கிய ஓட்டுநரை, லூதியானா ரயில் நிலையத்தில் கைது செய்தோம். அவரிடம் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் போலீஸுக்கு நெருக்கமான வட்டாரம், ‘ஓட்டுநர், தனக்கு ரயிலை தொடர்ந்து இயக்க க்ரீன் சிக்னல் அளிக்கப்பட்டதாகவும், தசரா கொண்டாட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்' என்று தகவல் தெரிவித்துள்ளது.

தசரா கொண்டாட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதுவரை அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ரயில்வே துறை அதிகாரிகள், ஃபதன்கோடிற்கு அருகிலிருந்த ரயில்வே லைன்மேன்களிடமும் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்கள், கொண்டாட்டம் குறித்து ரயில் ஓட்டுநருக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று லைன்மேன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில்வே தண்டவாளத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளது. உருவ பொம்மை எரிப்பின் போது, பட்டாசுக்களும் கொளுத்தப்பட்டது. இந்த சத்தம், ரயில் சைரனின் சத்தத்தை கேட்காமல் செய்து விட்டதாக தெரிகிறது.

.