This Article is From Feb 14, 2019

‘’காஷ்மீர் தாக்குதலின் கொடூரத்தை வார்த்தையில் சொல்ல முடியாது’’- தலைவர்கள் காட்டம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

‘’காஷ்மீர் தாக்குதலின் கொடூரத்தை வார்த்தையில் சொல்ல முடியாது’’- தலைவர்கள் காட்டம்

நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Srinagar/New Delhi:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தி தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இதில் குறைந்தது 12 வீரர்களாவது உயிரிழந்திருக்க கூடும்.

சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் இது மிகவும் கொடூரமாக உள்ளது. வெடிகுண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

— Mehbooba Mufti (@MehboobaMufti) February 14, 2019

உயிரிழந்த வீரர்களின் உடல்களின் புகைப்படங்கள், நெஞ்சை பதைபதைக்கும் வகையில் உள்ளன. இதனால் அந்த புகைப்படங்களை வெளியிடுவதை பல ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘'தீவிரவாத தாக்குதலின் கொடூரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை பேரை இந்த தீவிரவாதம் கொல்லப் போகிறது'' என்று கொதிப்புடன் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், ‘'இந்த தாக்குதல் மிகவும் கொடூரமாக உள்ளது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

உரி தாக்குதலின்போது 17 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 2016-ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் கொடூரமான முறையில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.

 

இதேபோன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரும் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

.