ஜம்மூ காஷ்மீரில் என்கவுன்ட்டர்: சுற்றி வளைக்கப்பட்ட முக்கிய தீவிரவாத தளபதி!

J&K encounter: கடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு சம்பவங்கள் மூலம், இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஜம்மூ காஷ்மீரில் என்கவுன்ட்டர்: சுற்றி வளைக்கப்பட்ட முக்கிய தீவிரவாத தளபதி!

Encounter Pulwama: பாகிஸ்தானிலிருந்து மிகவும் அதிக பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுறுவி வருவதாக தகவல் வந்துள்ளது.

Srinagar:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டதிதல் உள்ள பெய்க்புரா என்னும் பகுதியில் பதுங்கியிருந்த முக்கிய தீவிரவாத தளபதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பெய்க்புரா பகுதியில் தீவிரவாத தடுப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதியை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் என்று ஜம்மூ காஷ்மீர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல புல்வாமா மாட்டத்தின் ஷார்ஷாலி கிராமத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இரண்டு என்கவுன்ட்டர் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருவதாகவும், இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

இன்று காலை 9 மணி அளவில் பெய்க்புரா பகுதியில் என்கவுன்ட்டர் ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீரின் 10 மாவட்டங்களிலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பெய்க்புரா பகுதியில் இருக்கும் தீவிரவதி, தளபதி பொறுப்பில் இருக்கும் அளவுக்குப் பெரிய ஆள் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இது குறித்து காலை 9:07 மணிக்கு ஜம்மூ காஷ்மீர் போலீஸ், “அவாந்திபூர் பகுதியில் நடக்கும் என்கவுன்ட்டர் சம்பவம் பற்றிய தகவல். முக்கிய தீவிரவாத தளபதி சுற்றிவளைக்கப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. மேலும் தகவல்கள் கொடுக்கப்படும்,” என ட்விட்டர் மூலம் தெரிவித்தது. 

அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீர் போலீஸ், “அவாந்திபூர் போலீஸால் பெய்க்புரா பகுதியில் ஆபரேஷன் தொடர்ந்து நடந்து வருகிறது. மூத்த போலீஸ் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள்,” என ட்வீட்டியது. 

கடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு சம்பவங்கள் மூலம், இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்தியா, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், பாகிஸ்தானிலிருந்து மிகவும் அதிக பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுறுவி வருவதாக தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்துதான் கடந்த ஒரு மாத காலமாக என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்மூ காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில், இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 3 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 

கடந்த திங்கட்கிழமை, குப்வாரா மாவட்டப் பகுதியில் அமைந்திருந்த சிஆர்பிஎஃப் முகாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில், மூன்று தீவிரவாத தடுப்பு ஆபரேஷன் நடந்து வருவதாக ஜம்மூ காஷ்மீர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை கூட பாதுகாப்புப் படையினரால், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.