This Article is From Sep 11, 2020

எல்லையில் குவிக்கப்படும் அதிக அளவிலான சீன துருப்புக்கள்; இந்தியா கடும் எதிர்ப்பு!

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது தேவைப்படுவது ஒத்துழைப்பு. மோதல் அல்ல,. பரஸ்பர நம்பிக்கை, சந்தேகம் அல்ல. நிலைமை கடினமாகும்போது, ​​ஒட்டுமொத்த உறவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாப்பதும் மிக முக்கியமானது என்று சீன வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைப் பிரச்னையையொட்டி இரண்டாவது முறையாக இருநாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்

New Delhi:

நேற்று இரண்டாவது முறையாக மாஸ்கோவில் சந்தித்துக்கொண்ட இந்தியா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், எல்லையில் நடத்து வரும் தொடர் பிரச்னைகள் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை பற்றி விவாதிக்க போதுமான அவகாசத்தை வழங்கவில்லை என வட்டாரங்கள் கூறுகின்றன.

கூட்டத்திற்குப் பிறகு ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அத்துமீறல் செய்த அனைத்து துருப்புகளையும் திரும்பப் பெறுவது அவசியம் என சீனா கூறியுள்ளது.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த கூட்டத்தில் இந்திய துருப்புக்கள் அனைத்து ஒப்பந்தங்களையும் நெறிமுறைகளையும் மிகக் கடுமையாகப் பின்பற்றின என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மேலும், சீன துருப்புக்கள் அதிக அளவில் சர்ச்சைக்குரிய பகுதியில் குவிக்கப்பட்டிருப்பது 1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

சீனா, சர்ச்சைக்குரிய பகுதிகளில் பிரச்னையை தீர்க்க இருதரப்பு ராணுவ மட்டங்களிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளதாக கூறியுள்ளது. மேலும், எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து சீனாவின் கடுமையான நிலைப்பாட்டை  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கோடிட்டுக் காட்டியுள்ளார், துப்பாக்கிச் சூடு போன்ற ஆத்திரமூட்டல் மற்றும் இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை மீறும் பிற ஆபத்தான சூழ்நிலைகளை உடனடியாக நிறுத்த வேண்டியது அவசியத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இப்போது தேவைப்படுவது ஒத்துழைப்பு. மோதல் அல்ல,. பரஸ்பர நம்பிக்கை, சந்தேகம் அல்ல. நிலைமை கடினமாகும்போது, ​​ஒட்டுமொத்த உறவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் பரஸ்பர நம்பிக்கையைப் பாதுகாப்பதும் மிக முக்கியமானது என்று சீன வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபக்காலமாக நடைபெற்று வரும் எல்லைப் பிரச்னையையொட்டி இரண்டாவது முறையாக இருநாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.