மணமகளுக்கு திடீர் ஆபரேஷன்! பிரியங்கா சோப்ரா தம்பியின் திருமணம் நின்றது!!

Priyank Chopra : மணமகள் இஷிதாவின் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்னொரு முகூர்த்த நாளை குடும்பத்தினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மணமகளுக்கு திடீர் ஆபரேஷன்! பிரியங்கா சோப்ரா தம்பியின் திருமணம் நின்றது!!

சித்தார்த் - இஷிதா ஜோடியுடன் பிரியங்கா - நிக் ஜோனஸ்


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. சித்தார்த் - இஷிதா நிச்சயதார்த்தம் பிப்ரவரியில் நடந்தது
  2. வாக்களித்த பின்னர் அமெரிக்கா திரும்பினார் பிரியங்கா
  3. பிரியங்கா நடித்துள்ள The Sky Is Pink திரைப்படம் விரைவில் வெளியாகிறது

மணமகளுக்கு திடீர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தம்பியின் திருமணம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது. முன்னதாக, திருமணமே முற்றிலும் நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயதாகிறது. இவர் தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை கடந்த ஆண்டு திருமணம் முடித்தார். இப்போது பிரியங்கா அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். 
 

nkqljaho

nfs1hb6g

அவரது தம்பி சித்தார்த்துக்கும்  அவரின் நீண்ட நாள் காதலி இஷிதா குமாருக்கும் இடையே கடந்த பிப்ரவரியில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த  நிலையில் அவர்களது திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா வந்த பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்கா திரும்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

சித்தார்த் சோப்ரா புனேவில் சொந்தமாக பப் நடத்தி வருகிறார். அவர் பிரியங்கா சோப்ராவை விட 6 வயது குறைந்தவர். சித்தார்த்தும், இஷிதாவும் டேட்டிங் செய்து வந்த நிலையில், அவர்களது காதல் திருமணம் வரை வந்தது. இந்த நிலையில் மணமகள் இஷிதாவுக்கு எமர்ஜென்ஸியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. 

இதனால் திருமணத்தை இரு வீட்டாரும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மீண்டும் ஒரு  நல்ல நாளில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரியங்கா சோப்ரா தற்போது தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஃபர்கான் அக்தர், ஜைரா வாசிம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்தார்த் ராய் கபூருடன், இந்த படத்தை பிரியங்கா சொந்தமாக தயாரித்திருக்கிறார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................