This Article is From Feb 08, 2019

பீகாரில் தலைமை ஆசிரியர் அடித்ததால் 16 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சம்பவம் அறிந்து பள்ளிக்கு விரைந்த ஊர் மக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டனர்.

பீகாரில் தலைமை ஆசிரியர் அடித்ததால் 16 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

தலைமை ஆசிரியரின் தாக்குதலை தொடர்ந்து அந்த 16 மாணவர்களும் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்

Patna:

கடந்த வியாழக்கிழமையன்று பிகாரில் உள்ள பள்ளியின் வளாகத்தை சுத்தமாக வைக்காததால் அப்பள்ளியை சேர்ந்த 16 மாணவர்களை சரமாரியாக தலைமை ஆசிரியர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிகாரில் உள்ளள வைஷாலி மாவட்த்தில் இயங்கிவரும் அரசு நடுநிலை பள்ளியில் இச்சம்பவம் நடந்ததாக போலீஸ்சார் தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்து அங்கு விரைந்த ஊர் மக்கள்,பிள்ளிக்கு உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டனர். மேலும் இத்தகையை கொடூர செயல்களில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார் மீது நடவெடிக்கை எடுக்கும் படி கட்டாயப்படுத்தினர்.

இச்சம்பவத்தை குறித்து போலீஸ் அதிகாரி சுனீல் குமார் சிங் கூறுகையில் ‘தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார், மாணவர்களை பலமாக தாக்கியதால் அந்த 16 மாணவர்களும் படுகாயமடைந்தனர். அதைதொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு செல்வதற்கு முற்றுகையிட முயன்றயபோது மற்ற ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமாரும் தப்பிவிட்டனர் ' என தெரிவித்தார். 
 

.