'உறுதிப்பாடு, முடிவெடுக்கும் திறமையால் நாட்டின் பல பிரச்னைகளை தீர்த்துள்ளோம்' : மோடி!!

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். 2014 - 2019 -ல் சிறப்பான ஆட்சியை நடத்தியதற்காக 2019 மக்களவை தேர்தலில் இந்திய மக்கள் மகத்தான் வெற்றியை தங்களுக்கு தந்ததாக மோடி குறிப்பிட்டார்.

'உறுதிப்பாடு, முடிவெடுக்கும் திறமையால் நாட்டின் பல பிரச்னைகளை தீர்த்துள்ளோம்' : மோடி!!

2014 முதல் 2019 வரையிலான தனது அரசின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மோடி கூறியுள்ளார்.

New Delhi:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உறுதிப்பாடு, முடிவெடுக்கும் தன்மை ஆகியவற்றால் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த ராமர் கோயில் பிரச்னை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, முத்தலாக் விவகாரங்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். 

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். 2014 - 2019 -ல் சிறப்பான ஆட்சியை நடத்தியதற்காக 2019 மக்களவை தேர்தலில் இந்திய மக்கள் மகத்தான் வெற்றியை தங்களுக்கு தந்ததாக மோடி குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து மோடி பேசுகையில்,'காங்கிரஸ் கட்சி கடைபிடித்த அதே வழியை நாங்களும் கடைபிடித்துக் கொண்டிருந்தால் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டிருக்காது, முத்தலாக் பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்காது. 

எதிர்க்கட்சி அரசு கடைபிடித்ததை நாங்களும் செய்திருந்தால் ராமர் கோயில் பிரச்னை தீர்க்கப்படாமல் அப்படியே இருந்திருக்கும், கர்தார்பூர் சாஹிப் சீக்கிய புனிதக் கோயில் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்காது, இந்தியா - வங்க தேச நில ஒப்பந்தம் ஏற்படாமல் இருந்திருக்கும்.

பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. இந்த பிரிவினைக்கு பின்னர் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த துன்பங்களை நம்மால் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாது.' என்று பேசினார்.