மத்தியபிரதேசத்தில் தபால்காரரை தாக்கி வாக்குசீட்டுகள் பறிப்பு!

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் இது போன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மத்தியபிரதேசத்தில் தபால்காரரை தாக்கி வாக்குசீட்டுகள் பறிப்பு!

தபால் ஓட்டுகளை எடுத்து சென்றவர்களை தாக்கிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்த அனைத்து தபால் ஓட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.


Bhopal: 

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் மத்திய பிரதேசத்தில் 256 தபால் ஓட்டுக்களை எடுத்துக்கொண்டு சென்ற தபால்காரரை கும்பலாக மர்ம மனிதர்கள் சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர். மத்திய பிரதேசம் பிந்த் மாவட்டத்திலிருந்து நேற்று தபால் ஓட்டுகளை எடுத்து சென்றவர்களை தாக்கிய மூவரை கைது செய்து அவர்களிடமிருந்த அனைத்து தபால் ஓட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது. தபால் காரர் கொடுத்த புகரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது புகாரில் அவரை 25க்கும் அதிகமானோர் தாக்கியதாகவும், தனது கையில் இருந்த பைகளை எடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் இது போன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விவேக் தன்கா தேர்த‌ல் ஆணையத்திடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் அளித்திருந்தார். 

போபாலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைத்திருந்த இடத்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. அங்கும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................