This Article is From Nov 21, 2018

‘பாகிஸ்தானுடன் சேர்ந்து மோடியை வீழ்த்த திட்டம்’-காங்கிரஸை சீண்டும் உமா பாரதி

மத்திய பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் உமா பாரதி, திடுக்கிடும் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது சுமத்தியுள்ளார்

‘பாகிஸ்தானுடன் சேர்ந்து மோடியை வீழ்த்த திட்டம்’-காங்கிரஸை சீண்டும் உமா பாரதி

உமா பாரதி, காங்கிரஸ் மீது சர்ச்சை கிளப்பும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Damoh:

மத்திய பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் உமா பாரதி, திடுக்கிடும் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மீது சுமத்தியுள்ளார். 

அவர் பேசுகையில், ‘வங்கதேசத்துக்காக இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்ட போது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்தார். ஏனென்றால் அப்போது பாகிஸ்தானை வீழ்த்துவது தான் ஒரே நோக்கமாக இருந்தது. 

ஆனால் தற்போது ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடந்தபோது, காங்கிரஸ், ராணுவத் தளபதிக்கு எதிராகவே கருத்து கூறியது. அக்கட்சியின் தலைவர் ஒருவர் பாகிஸ்தானுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார். இதன் அர்த்தம் காங்கிரஸ், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு பிரதமர் மோடியை வீழ்த்தத் திட்டம் போட்டுள்ளது' என்று பகீர் கிளப்பும் குற்றச்சாட்டை முன் வைத்தார். 

சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, ‘பிரதமர் நரேந்திர மோடி என் மீது பொறாமையில் இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரது பதவியேற்பு விழாவுக்கு என்னை அழைத்தார். ஆனால், பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தான் பொறாமைக்குக் காரணம்' என்று பேசினார். 

இதையடுத்துதான் உமா பாரதி, காங்கிரஸ் மீது சர்ச்சை கிளப்பும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

.