சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018: மத்திய பிரதேசத்தில் தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை!

வாக்குப் பெட்டிகளில் பதிவான வாக்குகள் முதல் 30 நிமிடங்களில் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் எண்ணிக்கை தொடங்கப்படும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2018: மத்திய பிரதேசத்தில் தாமதமாகும் வாக்கு எண்ணிக்கை!

மத்திய பிரதேசத்தில் தாமதமாகுகிறது வாக்கு எண்ணிக்கை!


Bhopal: 

டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை வோட்டர் வெரிவாபல் பேப்பர் ஆடிட் ட்ரையல் (விவிபிஏடி) (VVPAT) (VOTER VERIFABLE PAPER AUDIT TRAIL) எனப்படும் நவீன வாக்குபதிவு இயந்திரம், சோதனை செய்யப்பட உள்ளதால் வாக்கு எண்ணிக்கை தொடங்க மேலும் 2 மணிநேரம் தாமதமாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் (விவிபிஏடி) இயந்திரங்களை கொண்டு வாக்குபதிவு நடந்தது இதுவே முதல்முறை. அங்குள்ள 230 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட உள்ளன.

வாக்குப் பெட்டிகளில் பதிவான வாக்குகள் முதல் 30 நிமிடங்களில் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரங்களில் எண்ணிக்கை தொடங்கப்படும். சுமார் 14,600 அரசு அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவிலும், அதிகார்வபூர்வமான முடிவுகள் வெளியிடப்படும். அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கொண்டதால் மத்திய பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என இரு கட்சிக்களுக்கும் முக்கியமாகும்.

மேலும் இரு கட்சியினரும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏதாவது முறைகேடு நடந்து விடக்கூடும் எனக் கருதி, இயந்திரங்களை பாதுகாத்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை சில மணிநேரத்தில் தொடங்குள்ள நிலையில் இரு கட்சி ஆட்களும் வாக்கு எண்ணும் மையத்தில் இருப்பதாக களத்தில் இருக்கின்ற NDTV நிருபர்கள் தெரிவித்தினர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................