This Article is From Jan 08, 2019

பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! - ஜன.14ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு!

Pongal Holiday: ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்கும்.

பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! - ஜன.14ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ந்தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஏற்கெனவே ஜனவரி 15 மற்றும் 16, 17 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 12 மற்றும் 13-ஆம் தேதிகளும் சனி மற்றும் ஞாயிறு ஆக உள்ளதால் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அன்று விடுமுறை அறிவித்துள்ளன. அதேசமயம் இடையில் 14-ஆம் தேதி மட்டும் விடுமுறை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், வெளியூர்களில் இருப்பவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று வர வசதியாக, ஜனவரி 14-ஆம் தேதியான போகிப் பண்டிகை அன்று தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரும் ஜனவரி 14ஆம் தேதி விடுமுறை என்பதால் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்கும்.

அதேமசயம் ஜனவரி 14-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய, வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.