This Article is From Mar 03, 2020

சமூக வலைத்தளங்கள் குறித்த பிரதமரின் யோசனைக்கு ராகுல் காந்தியின் கருத்து.

பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களுடன் சமூக வலைத்தள பிரபலமாக இருக்கும் பிரதமர் மோடி, திடீரென தன்னுடைய மனம் மாற்றம் குறித்த காரணத்தை விவரிக்கவில்லை.

சமூக வலைத்தளங்கள் குறித்த பிரதமரின் யோசனைக்கு ராகுல் காந்தியின் கருத்து.

PM Modi made a surprise announcement that he will be going off social media

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் டிவிட் ஒன்றில் சமீபத்தில் தனது கருத்தினை வெளியிட்டிருந்தார். யாரும் எதிர்பாராத இந்த டிவிட்டினால் சில நிமிடங்களில் டிவிட்டர் தளம் பெரும் பரபரப்பானது.

இந்த ஞாயிற்றுக்கிழமை முதல், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் எனத் தனது சமூக வலைத்தள கணக்குகளை விட்டுவிட நினைத்தேன். என்று பிரதமர் மோடி டிவிட் செய்திருந்தார். இந்த டிவிட் அரை மணி நேரத்திற்குள் 25,000 தடவைகளுக்கு மேல் லைக் சமிஞ்ஞைகளைப் பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கினர். காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி முதலில் கருத்து தெரிவித்திருந்தார், " வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக வலைத்தள கணக்குகள் அல்ல " என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

“எனவேதான் சோனியா காந்திக்கு எந்த சமூக வலைத்தள கணக்கும் இல்லையா?" என்று திரிபுரா முதல்வரும் பாஜக தலைவருமான பிப்லாப் டெப், ராகுல் காந்தியின் டிவிட்டை டேக் செய்து கேள்வியெழுப்பியிருந்தார். ராகுல் காந்தியின் தாயும் தற்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி எவ்வித சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூரும் பிரதமரின் டிவிட்டிற்கு கருத்து தெரிவித்திருந்தார். “திடீர் அறிவிப்பு நாட்டில் சமூக வலைத்தளத்தை தடை செய்வதற்கான முதல் படியா?” என்று பலரையும் ஊகிக்க வழிவகுத்திருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் அல்கா லாம்பா ஆகிறார்கள், பிரதமரின் இந்தக் கருத்தினை சமூக வலைத்தளங்களுக்கான "பெரிய நிவாரணம்" என்றும், வெளிநாட்டுத் தலைவர்கள் உங்கள் வாழ்த்து செய்திகளை வெவ்வேறு மொழிகளில் தவறவிடுவார்கள், என்றும் டிவிட் செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவி அம்ருதாவும் டிவிட்டரில் இது குறித்து கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், பிரதமர் மோடியின் "வழியைப் பின்பற்றுவேன்", என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்தானது அம்ருதாவும் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவார் என்பதைக் குறிக்கிறது.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் பிரதமருடைய கருத்திற்குப் பதிலளித்துள்ளார், பிரதமரின் இந்த கருத்தானது வரவேற்புக்குரியது என்று அதில் கூறியிருக்கிறார்.

குஜராத் அரசியல்வாதி ஜிக்னேஷ் மேவானியும் பிரதமரின் டிவிட்டிற்கு தன்னுடைய கருத்தினை தெரிவித்திருந்தார். “பாஜக அரசாங்கத்தின் மிகவும் பிரபலமான டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்குப் பிறகு அவர் ஏன் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகினார்” என்று தன்னுடைய கருத்தினை தெரிவித்திருந்தார்.

மேலும், சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதற்குப் பதிலாகப் பெண்களை அவமதிக்கின்றவர்கள் மற்றும் வெறுக்கின்ற நபர்களின் கணக்குகளைப் பின்பற்றுவதை நிறுத்துமாறும் பிரதமரை அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களுடன் சமூக வலைத்தள பிரபலமாக இருக்கும் பிரதமர் மோடி, திடீரென தன்னுடைய மனம் மாற்றம் குறித்த காரணத்தை விவரிக்கவில்லை.

53.3 மில்லியன் பின்தொடர்பவர்களுக்குப் பிரதமர் அளித்த டிவிட் அனைவரையும் யூகிக்க வைத்திருக்கின்றது. இந்த அறிவிப்பை அவர் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் வெளியிட்டார்.

.