This Article is From Sep 23, 2018

‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு அறிமுகத்தின் 10 முக்கிய குறிப்புகள்

பொருளாதரத்தில் பின் தங்கிய ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்

‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

New Delhi/Ranchi:

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் மருத்துவ காப்பீடு ஆவணங்களை பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார். இந்த மருத்துவ திட்டத்திற்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவ திட்டத்தின்படி, பொருளாதரத்தில் பின் தங்கிய ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

10 முக்கிய குறிப்புகள்

  1. “உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் பயனுள்ளதாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
  2. ஜார்கண்ட் மாநில பயனாளிகளுக்கு, காப்பீடு குறித்த அறிக்கை வழங்கப்பட்டது. இதைப் போல, நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள 10.74 கோடி பயனாளிகளுக்கும் காப்பீடு குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
  3. தீனதயாள் உபாத்யாயா பிறந்த தினமான நாளை மறுதினம் 25ம் தேதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  4. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளின் மொத்த மக்கள் தொகை கூட ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளின் எண்ணிகையை நெருங்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
  5. இந்த திட்டதிற்கான 60% நிதி மத்திய அரசும், 40% நிதி மாநில அரசுகளும் அளிக்க உள்ளன
  6. இந்த திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  7. குறிப்பிடப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில், பயனாளிகள் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்
  8. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பெற்றுள்ளவர்களின் அடையாளத்தின் பேரில், இந்த திட்டத்திற்கு பதிவு செய்யலாம்
  9. தெலுங்கானா, ஒடிஷா, டில்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்திற்காக மத்திய அரசுடன் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
  10. 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர். மேலும், அடுத்த 6 மாதங்களில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

.