This Article is From Jan 28, 2020

“சோ சோ கியூட்…”- இந்த குறும்புக்கார குட்டி யானை செய்யும் சேட்டையைப் பாருங்கள்

“நான் பார்த்த அனைத்து யானைகளையும் விட குன்சிக்கிடம் ஒரு அதீத எனர்ஜி உள்ளது. அவன் செம க்யூட்,”

“சோ சோ கியூட்…”- இந்த குறும்புக்கார குட்டி யானை செய்யும் சேட்டையைப் பாருங்கள்

இதுவரை, இந்த வீடியோ 5,000 முறை பார்க்கப்பட்டுள்ளன. ட்விட்டர் பயனர்கள் வீடியோவுக்கு கொடுத்த ரியாக்ஷன்களைப் பாருங்கள். 

மிருகங்கள், மனிதர்களை சக மனிதர்களைவிட பாசமாக பார்த்துக் கொள்ளும் என்று பலரும் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த புதிய வைரல் வீடியோவில், ஒரு குறும்புக்கார குட்டி யானை, தனது காப்பாளரிடம் 'செல்ல சண்டை' போடுவது காண்போரை சிலிர்க்க வைக்கிறது. ராஜ்யசபா உறுப்பினரான பரிமல் நாத்வானியால் ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு, பலரது முகங்களிலும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது. 

டெய்லி மெயில் செய்தி நிறுவனம் கொடுக்கும் தகவல்படி, இந்த சம்பவம் தாய்லாந்தில் உள்ள மே-சா யானைகள் முகாமில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. 

வீடியோவில், ஒரு வயதே நிரம்பிய குன்சுக் என்கிற யானைக் குட்டி, வேலிகளைத் தாண்டி, தனது காப்பாளரான டேன் டயிங்-ஐ, தும்பிக்கையால் கூப்பிடுகிறது. டேன், குன்சுக்-ஐ கண்டுகொள்ளாமல் தனது வேலையைப் பார்க்கும்போது, அது இன்னும் ஆக்ரோஷத்துடன் அவரைச் சீண்டுகிறது. டேன் எழுந்து, குன்சுக்-ஐ மதிக்கும் வரை, அது அவரை விடவே இல்லை. 

இந்த வீடியோவைப் பகிர்ந்த நாத்வானி, “இந்த யானையின் குறும்புத்தனம் கண்களுக்கு விருந்து. மனித - மிருக நட்பு பற்றி ஒரு சான்று இந்த வீடியோ,” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
 

இதுவரை, இந்த வீடியோ 5,000 முறை பார்க்கப்பட்டுள்ளன. ட்விட்டர் பயனர்கள் வீடியோவுக்கு கொடுத்த ரியாக்ஷன்களைப் பாருங்கள். 

குன்சுக் பற்றி டேன் கூறுகையில், “நான் பார்த்த அனைத்து யானைகளையும் விட குன்சிக்கிடம் ஒரு அதீத எனர்ஜி உள்ளது. அவன் செம க்யூட்,” என்று நற்சான்று கொடுக்கிறார். 

Click for more trending news


.