தர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகரியாக நடிக்கிறார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
தர்பார் மும்பை படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

தர்பார் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுகிறது.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது
  2. நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.
  3. தர்பார் படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாவலர்களுடன் வந்திருந்தார்.  படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தும், வணக்கம்  கூறியபடி படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தார். எளிமையாக நீல வண்ணத்தில் சட்டையும் ட் ராக் பேண்டும் அணிந்திருந்தார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகரியாக நடிக்கிறார். 

காவல்துறை அதிகாரியாக 25 ஆண்டுகளுக்கு முன் 1992 ஆம் ஆண்டு பாண்டியன் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் காவல்துறை அதிகாரியாக தர்பாரில் நடிக்கிறார். 

படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்த ரஜினியின் புகைப்படம்

u880h7b
e72s2f18
vq61285g

 ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மூன்று முகம் படத்தில் நடித்திருப்பார். இந்தப்படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது.

தர்பார் பட போஸ்டர். இந்தப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த்துடன் நயன்தாரா சந்திரமுகி மற்றும் குசேலன் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தர்பார் படம் 2020 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

(With inputs from IANS)



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................