This Article is From Aug 12, 2018

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துனைவேந்தர் நியமனம்

புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஷீலா ஸ்டீபன், 70க்கும் மேற்பட்ட ஆய்வு பதிப்புகளை வெளியிட்டுள்ளார்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துனைவேந்தர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தராக ஷீலா ஸ்டீபன் பதிவு வகிப்பார் என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஷீலா ஸ்டீபன், 70க்கும் மேற்பட்ட ஆய்வு பதிப்புகளை வெளியிட்டுள்ளார். லண்டனில் உள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள ஸ்ப்ரிங்ஃபீல்டு உடற்கல்வி கல்லூரி, உட்பட 14 நாடுகளில் உள்ள கல்விசார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் நேற்று நடைப்பெற்ற பதிவியேற்பு விழாவில், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபன் பொறுப்பேற்றார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.