கடலை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா??

வேகவைத்த அல்லது வறுத்த கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.  

கடலை சாப்பிடுவதால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா??

ஹைலைட்ஸ்

  • நிலக்கடலையில் ஃபோலேட், மக்னீஷியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.
  • நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நிலக்கடலை சாப்பிடலாம்.

நிலக்கடலையில் புரதச்சத்து ஏராளமாக உள்ளது.  வீகன் உணவு உட்கொள்பவர்களுக்கு ஏற்ற உணவு கடலை.  100 கிராம் கடலையில் 25.8 கிராம் புரதம் இருக்கிறது.  நம்மில் பலரும் மாலை நேர பசியை போக்கவும், பயணத்தின்போதும் கடலை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம்.  கடலையை அதிகபடியாக கலோரிகள் இருப்பதால் அளவாக சாப்பிடுவதே நல்லது.  நிலக்கடலையில் கொழுப்பு சத்தும் இருக்கிறது.  கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாகவும் இருக்கும் கடலையை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  நிலக்கடலையின் வேறு சில நன்மைகளை பார்ப்போம்.  

வைட்டமின்:
நிலக்கடலையில் வைட்டமின், பையோடின், ஃபோலேட், காப்பர், வைட்டமின் ஈ, மாங்கனீஸ், தையாமின், பாஸ்பரஸ், மக்னீஷியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  
 

mqr9f7k

 

இருதய ஆரோக்கியம்: 
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நம்மில் பெரும்பாலானோர் இருதய நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.  இருதய ஆரோக்கியத்தை சீராக்க கடலை சாப்பிடலாம்.  வேகவைத்த அல்லது வறுத்த கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.  

உடல் எடை: 
கடலையை அதிகபடியாக சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  கடலை சாப்பிடுவதால் நீங்கள் நீண்ட நேரத்திற்கு நிறைவாக உணர முடியும்.  இதனால் அடிக்கடி பசியுணர்வு ஏற்படாது.  

ஒவ்வாமை: 
சிலருக்கு நிலக்கடலையினால் ஒவ்வாமை ஏற்படும்.  அடிக்கடி கடலை சாப்பிட்டு வந்தால் கடலையில் இருக்கக்கூடிய புரதம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து ஒவ்வாமையை போக்கிவிடும்.  குழந்தைகளை நிலக்கடலை சாப்பிட வைத்து பழக்கலாம்.  
 

Listen to the latest songs, only on JioSaavn.com