This Article is From Mar 22, 2019

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இதுதான்...! உடல் எடைக் குறைப்பவர்களும் இதை சாப்பிடலாம்

பலருக்கும் ஏதேனும் இனிப்பாகவோ அல்லது உப்பும் உரைப்புமாகவே சாப்பிடத் தோன்றும் உணர்வை கட்டுப்படுத்தவே முடியாது. இதற்காக ஆரோக்கியமற்ற உணவினை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இதுதான்...! உடல் எடைக் குறைப்பவர்களும் இதை சாப்பிடலாம்

அலுவலகத்திற்கும் இதைக் கொண்டு செல்லலாம்

ஹைலைட்ஸ்

  • வறுத்த கொண்டைக் கடலை ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும்
  • வறுக்கும் போது உப்பை தவிர்ப்பது நல்லது.
  • Eat them with peanuts to increase your protein intake

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஒரு நாளின் பல முறை தேவைப்படுகிறது ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. ஸ்நாக்ஸ் இல்லையென்றால் எப்போதும் பசியோடு இருப்பது போன்ற உணர்வே இருக்கும். பலருக்கும் ஏதேனும் இனிப்பாகவோ அல்லது உப்பும் உரைப்புமாகவே சாப்பிடத் தோன்றும் உணர்வை கட்டுப்படுத்தவே முடியாது. இதற்காக ஆரோக்கியமற்ற உணவினை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வாழ்க்கைமுறை நிபுணரான லுக்கே கொடின்கோ வறுத்த கருப்பு சன்னா அல்லது உப்புக் கடலையை ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கும் என்று கூறுகிறார். கருப்பு கொண்டைக் கடலையில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளது. மேலும் குறைவான கலோரிகள் உடல் எடை குறைக்க உதவுகிறது.

வறுத்த கருப்பு கொண்டைக் கடலை: ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்

ஃபேஸ்புக்கில் நேரடி நேர்காணலில் பேசிய வாழ்க்கைமுறை நிபுணர் லுக்கே மக்கள் பிராசஸ் செய்யப்பட்ட பேக்கேஜ் ஜங்க் புட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மாறாக வறுத்த கருப்பு கொண்டைக் கடலையை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். இது எளிதாக கிடைக்கக் கூடியது மேலும் இது விலை மலிவானதும் கூட. இதன் நன்மைகளும் அதிகம். உப்புக் கடலையில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமுள்ளது. கலோரி மற்றும் கொழுப்புச் சத்தும் குறைவாக உள்ளது. 

புரதச்சத்து நிறைந்த கருப்பு கொண்டைக் கடலை

50 கிராம் அல்லது நான்கரை டேபிள்ஸ்பூன் சன்னாவில் 9 கிராம் புரதச்சத்து உள்ளது. புரதச்சத்தினை அதிகரிக்க விரும்பினால் ஒரு கைப்பிடி நிலக்கடலையுடன் ஒரு கைப்பிடி கருப்பு கொண்டைக் கடலையும் கலந்து சாப்பிடலாம். கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புச் சத்து இதயத்திற்கு மிகவும் நல்லது.மேலும் சருமத்தையும் தலைமுடியையும் பளபளப்பாக வைத்திருக்கிறது. உங்கள் காரிலோ அல்லது ஸ்கூட்டியிலோ ஒரு ஜார் நிறைய வறுத்த உப்புக் கடலையை வைத்துக் கொள்ளலாம். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நிறைய எடுத்து வைத்து தேவைக்கு சாப்பிடலாம். காரில் வைக்கும் போது சூரிய வெளிச்சம் நேரடியாக படாமல் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

ft09j8n

கருப்பு கொண்டைக் கடலையில் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்

கருப்பு உப்புக் கடலையில் உப்பு சேர்த்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் குறைகிறது. மேலும் பசியுணர்வைத் தூண்டி தண்ணீர் தாகத்தையும் அதிகரிக்கிறது. உப்பான உணவினை அதிகம் எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனையாகிறது.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரை உடலை எனர்ஜியாக வைத்திருக்க உதவுகிறது. எனர்ஜி குறைவதாக உணரும் நேரத்தில் இந்த உப்புக் கடலையை சாப்பிடலாம். கருப்பு சன்னாவை காற்றுபுகாதா டப்பாவில் போட்டுவைப்பது நல்லது. இல்லையென்றால் மொறுமொறுப்பு குறைந்து நமத்து போய்விடும். நீண்ட நாள் வைத்திருக்க பிரசர்வேடிவ் என எதையும் சேர்க்க வேண்டியதில்லை.

(Luke Coutinho, Holistic Lifestyle Coach - Integrative Medicine)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

.