இன்று உலக தண்ணீர் தினம்: உடல் எடை குறைப்பு முதல் சருமப் பராமரிப்பு வரை உதவும் குடிநீர்

World Water Day 2019: இந்த நாளில் குடிநீரை கிடைக்கும் இடங்களை பாதுகாக்கவும், குடிநீரின் பயன்பாட்டை முறைப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று உலக தண்ணீர் தினம்: உடல் எடை குறைப்பு முதல் சருமப் பராமரிப்பு வரை உதவும் குடிநீர்

நீர் ஆதாரங்களை நீண்ட காலம் பயன்படுத்த எவ்வித வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இந்த ஆண்டு குடிநீர் தினத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
  • உடலில் உள்ள கசடுகளை நீக்க தண்ணீர் உதவுகிறது

இன்று உலக தண்ணீர் தினம்  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குடிநீரை கிடைக்கும் இடங்களை பாதுகாக்கவும், குடிநீரின் பயன்பாட்டை முறைப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. உலகில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் சூழலில் நீரின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நீர் ஆதாரங்களை நீண்ட காலம் பயன்படுத்த எவ்வித வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இந்த ஆண்டு குடிநீர் தினத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. 

நம் உடல் முறையாக செயல்பட நீர் மிகவும் அவசியம். மூளை, ரத்தம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்து வற்றாமல் வைத்திருக்க உதவுகிறது. நாம் குடிக்கும் பழச்சாறுகளோ அல்லது வேறு எந்த வகையான பானங்களோ தண்ணீர் அளவுக்கு உடலின் தேவைகளை பூர்த்தி செய்வதில்லை. ஒவ்வொரு வரும் அன்றாடம் குறைந்தபட்சம் 6-8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது. உடலில் வெப்பத்தை சமநிலையுடன் வைத்திருக்க உதவுகிறது. மூட்டு வலி,செரிமானச் சிக்கலைத தவிர்க்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது. உடலில் உள்ள கசடுகளை வெளியேற்றுகிறது. இதயத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. 

குடிநீரின் நன்மைகள் என்னவென பார்க்கலாமா…

1. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை குறைய உதவுகிறது. தண்ணீர் ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸின ஆகியவை உடல் முழுவதும் கொண்டும் செல்ல பயன்படுகிறது. மேலும் நீர் இறந்த செல்களை வெளியேற்றவும் உதவுகிறது. உடலில் உள்ள புரதங்கள் மற்றும் என்சைம்கள் தங்கள் பணிகளைச் செய்ய நீர் அவசியமாகிறது. இதனால் உடலின் வளர்சிதை  மாற்றம் அதிகரிக்க உதவுகிறது.  

2. உடல் எடை குறைகிறது

நீர் அதிகமாக குடிப்பதுதான் உடல் எடை குறைப்பின் மிக முக்கிய தேவையாகும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் அதிகளவு உணவு சாப்பிடுவது இயல்பாகவே குறைந்து விடும். 

3. சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை நீக்குகிறது 

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை நீக்க சிறப்பான வழி அதிகளவு தண்ணீர் குடிப்பது மட்டுமே. அதிகளவு தண்ணீர் குடித்தாலே சிறுநீரில் கல் உருவாவதை தடுக்க முடியும். நீர் உடலில் அதிகளவு சேரும் ரசாயனங்கள், தாதுக்கள் மற்றும் உப்புகள் உடலில் தேங்குவதை தவிர்க்கிறது. சிறுநீர் வழியே உடலின் நச்சு கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.  

4. ஆரோக்கியமான சருமத்திற்கு

சருமத்தில் கொப்புளங்கள் உருவாகாமல் இருக்க அதிகளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். சர்க்கரை நோயாளிகள், வயதாகும் அறிகுறிகளான தோல் சுருக்கம், முதுகெலும்பில் வளைவு ஆகியவை வராமல் தவிர்க்கிறது. 

5. ஆரோக்கியமான செரிமானத்திற்கு

தண்ணீர் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. தண்ணீரின் அளவு குறைந்தால் மலச்சிக்கல் அல்லது வயிற்று போக்கிற்கு வழிவகுக்கிறது. தண்ணீர் உணவை முறையாக செரித்து கழிவினை வெளியேற்றுகிறது.

 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.