This Article is From Jan 11, 2020

'அப்பாவி இந்தியர்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள்'-மத்திய அரசை கலாய்த்த சிதம்பரம்!!

நாட்டில் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது, 99 சதவீத குடும்பத்தினருக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவில் நம்பப்பட்டு வருவதாக சிதம்பரம் கூறியுள்ளார்.

'அப்பாவி இந்தியர்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள்'-மத்திய அரசை கலாய்த்த சிதம்பரம்!!

இந்தியர்களைப் போன்ற ஒரு அப்பாவிகளை தான் பார்த்ததில்லை என்கிறார் சிதம்பரம்.

'அப்பாவி இந்தியர்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுகிறார்கள்' என்று மத்திய அரசை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விட்டதாக அரசு கூறுவதை இந்திய மக்கள் முழுவதுமாக நம்பி விடுகிறார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப. சிதம்பரம் பேசியதாவது-

நான் இந்தியர்களைப் போன்ற ஒரு அப்பாவிகளை பார்த்தது இல்லை. தினசரி நாளிதழில் எது சொல்லப்பட்டிருந்தாலும், அவற்றை நாம் நம்பி விடுகிறோம். அது எதுவாக இருந்தாலும் சரி. 

நாட்டில் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது, 99 சதவீத குடும்பத்தினருக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என்று இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது. 

இதேபோன்று மத்திய அரசின் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பாக அரசு வெளியிடும் அறிக்கைகளும் நம்பப்படுகிறது. 

கார் டிரைவர் ஒருவரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரிடம் ஆயுஷ்மான் அட்டை இருந்தால் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினேன். அவரம் அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவமனையில் ஆயுஷ்மான் அட்டை தொடர்பாக அவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. ஆனால் ஆயுஷ்மான் திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். 

எந்தவொரு நோய் வந்தாலும், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் எந்த காசும் செலவழிக்காமல் சிகிச்சை பெற்று விடலாம் என நம்பிக்கொண்டிருக்கிறோம். நாம் அப்பாவிகளாகவே இருக்கிறோம். 

பல செய்திகள் மற்றும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாக இருக்கிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். 
 

.