This Article is From Jul 01, 2020

எங்கள் மருந்துகள் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஒருபோதும் கூறியதில்லை: பதாஞ்சலி

இதுதொடர்பாக மருந்துகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரி கூறும்போது, பதாஞ்சலி நிறுவனம் "நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தவே உரிமம் கோரியதாகவும், அந்த தயாரிப்புகளை, தடுப்பு மருந்துகளின் ஒரு பகுதி என்பதை அந்நிறுவனம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என்றும் கூறினார்.

எங்கள் மருந்துகள் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஒருபோதும் கூறியதில்லை: பதாஞ்சலி

எங்கள் மருந்துகள் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஒருபோதும் கூறியதில்லை: பதாஞ்சலி (File)

New Delhi:

எங்கள் மருந்துகள் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஒருபோதும் கூறியதில்லை என யோகா குரு ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கடந்த வாரம் யோகா குரு ராம்தேவ் பரபரப்பான கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில், கொரோனா வைரஸ் பாதித்த 280 நோயாளிகளை சோதனை முயற்சிகளில் குணப்படுத்தியதாக கூறியிருந்தார். இதனிடையே, மத்திய அரசு தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. 

இந்நிலையில், பதாஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறும்போது, எங்களது மருந்தான (கொரோனில்), கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்றோ, குணப்படுத்தும் என்றோ நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. நாங்கள் மருந்துகளை தயாரித்துள்ளோம், அவற்றை கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவ கட்டுப்பாட்டு சோதனையில் பயன்படுத்தி பார்த்தோம். அது கொரோனா நோயாளிகளை குணப்படுத்தியது என்றே தெரிவித்தோம். அதில் எந்த குழப்பமும் இல்லை, என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆயுஷ் அமைச்சகம் பதாஞ்சலியிடம், மருந்துகளின் கலவை, அதன் ஆராய்ச்சியின் முடிவுகள், ஆராய்ச்சி நடத்தப்பட்ட மருத்துவமனைகள், நிறுவன நெறிமுறைக் குழுவிலிருந்து அனுமதி பெற்றதா, மருத்துவ சோதனக்கு பதிவு செய்துள்ளதா போன்ற விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. 

இந்த விவகாரம் குறித்து உத்தரகாண்ட் ஆயுர்வேத துறையை சார்ந்த மருந்துகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரி ஒய்எஸ் ராவத் கூறும்போது, பதாஞ்சலி நிறுவனம் "நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தவே உரிமம் கோரியதாகவும், அந்த தயாரிப்புகளை, தடுப்பு மருந்துகளின் ஒரு பகுதி என்பதை அந்நிறுவனம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என்றும் கூறினார். 

தொடர்ந்து, பதாஞ்சலி நிறுவனத்திற்கு மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு பதிலளித்த அந்நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துகள் எதுவும் தங்களால் தொகுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனில் மருந்தின் பேக்கேஜில் கொரோனா வைரஸை பிரதிநிதிப்படுத்தும் படத்தை மட்டும், அச்சிடப்பட்டுள்ளது. கொரோனில் மற்றும் இரண்டு மருந்துகளின் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். 

மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஜெய்ப்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேசிய மருத்துவ அறிவியல் நிறுவன பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளதாக பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். 

மேலும் அவர் கூறும்போது, கொரோனா மருந்துகளான, கொரோனில் மற்றும் ஸ்வாசரி ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறோம். இதில் இரண்டு சோதனைகளை நாங்கள் நடத்தினோம். முதல் சோதனையானது டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்தது. இதன் மூலம் 280 நோயாளிகள் 100 சதவீதம் குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவையும் அதன் சிக்கல்கள்கையும் எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. இதன் பின்னர் அனைத்து முக்கியமான மருத்துவ கட்டுப்பாட்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தார். 
 

With inputs from ANI

.