This Article is From Jul 11, 2019

பாகிஸ்தானில் ரயில்கள் நேருக்கு நேராக மோதி விபத்து - 9 பேர் பலி

மூன்று அல்லது நான்கு பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில்கள் நேருக்கு  நேராக மோதி விபத்து - 9 பேர் பலி

ஜூன் மாதம் இரண்டு ரயில்கள் மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் (Representational)

Islamabad:

பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதியதில் 9 பேர் பலி 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

பஞ்சாப் மாகாணத்தின் ரஹீம் யாரான் மாவட்டத்தில்  லாகூரிலிருந்து வரும் பயணிகள் ரயில் சரக்கு ரயிலில் மோதியுள்ளது என்று அரசாங்காத்தில் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஒன்பது பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜியோ நியூஸிடம் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் 66 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

மூன்று அல்லது நான்கு பயணிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ரயில் விபத்துகள் அடிக்கடி நடக்கூடிய நிகழ்வாக உள்ளது. ஊழல், தவறான மேலாண்மை மற்றும் முதலீட்டு  பற்றாக்குறை காரணமாக  பல ஆண்டுகளாக ரயில் விபத்து தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒன்றாகவே உள்ளது. 

இந்த சம்பவத்திற்கான காரணங்களை விசாரிக்க விசாரணை தொடங்கபட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தொலைக்காட்சி சேனல் ஆஜிடம் தெரிவித்தார். 

ஜூன் மாதம்  இரண்டு ரயில்கள் மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 

.