This Article is From Apr 13, 2019

டெல்லியில் காங். தனித்துப்போட்டி: ஷீலா தீட்சித்தை களமிறக்க திட்டம்!

மக்களவைத் தேர்தல் 2019: டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் காங். தனித்துப்போட்டி: ஷீலா தீட்சித்தை களமிறக்க திட்டம்!

ஷீலா தீட்சித் டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.

ஹைலைட்ஸ்

  • ஷீலா தீட்சித்தை போட்டியிட காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது
  • குடும்பத்துடன் கலந்தாலோசனை செய்ய காலஅவகாசம் கோரியுள்ளார்.
  • இந்த வார இறுதியில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவிக்கலாம்.
New Delhi:

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளதாகவும், இதுதொடர்பாக தனது குடும்பத்திடம் கலந்தாலோசனை செய்ய காலஅவகாசம் வேண்டும் என ஷீலா தீட்சித்தும் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை காங்கிரஸ் விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. இதில், ஷீலா தீட்சித் கிழக்கு டெல்லி பகுதியில் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. இதில், 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இறுதி செய்துள்ளதாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸின் டெல்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ செய்தியாளர்களிடம் கூறும்போது, கிழக்கு டெல்லிக்கான வேட்பாளர் பரிந்துரையில் ஷீலா தீட்சித் பெயர் தீவிர பரிசிலனையில் உள்ளது. அவரின் மூத்த மகன் சந்தீப் தீக்சித் போட்டியிட மறுத்துவிட்டால், நிச்சயம் ஷீலா தீட்சித் களமிறக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

இதேபோல், முன்னாள் டெல்லி அமைச்சர் யோகானந்த் சாஷ்த்ரி மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் ஆகியோர் பெயர்கள் தெற்கு டெல்லிக்கான வேட்பாளர்கள் பரிசீலனையில் உள்ளது.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், முன்னாள் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் சௌஹான், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் அஜய் மேக்கன் ஆகியோரை முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.அகர்வால் ஆகியோரை வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என பிரிசீலிக்கப்படுவாதகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை பலனில்லாமல் தோல்வியில் முடிந்தது.

டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி, ராகுல் காந்தி உத்தரவுபடி ஆத் ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். டெல்லியில் மட்டுமே கூட்டணி என்ற பேசிய ஆம் ஆத்மி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை வைத்தனர். இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. அதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என்று பி.சி.சாக்கோ கூறினார்.

.