ஒடிசாவில் தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை!

தற்கொலை குறித்து போலீஸாருக்குக் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஒடிசாவில் தமிழக பேராசிரியர், மனைவியுடன் தற்கொலை!

தங்களுக்குக் குழந்தை இல்லாததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தம்பதி எழுதியுள்ளனர்.


Rourkela, Odisha: 

ஒடிசாவின் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணி செய்து வந்த துணை பேராசரியர், தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசாவின் ரூர்கெலாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 

லைஃப் சைன்சஸ் துறையில் துணை பேராசிரியரான ராசு ஜெயபாலன், பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை குறித்து போலீஸாருக்குக் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் தங்களுக்குக் குழந்தை இல்லாததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதியுள்ளனர்.

“இருவரும் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தங்களுக்குக் குழந்தையின்மை காரணத்தால் மனமுடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக இருவரும் எழுதியுள்ளனர்” என்று ரூர்கெலா எஸ்.பி சர்தாக் சாரங்கி தகவல் தெரிவித்துள்ளார். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................