This Article is From Feb 01, 2020

நிர்பயா வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி!

நிர்பயா குற்றவாளிகள் இன்று காலை 6 மணிக்கு தூக்கிலடப்பட வேண்டிய நிலையில், நேற்று மாலை அடுத்த உத்தரவு வரும் வரையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது.

நிர்பயா வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி!

Nirbhaya Case: முறைப்படி குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 22-ம்தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.

New Delhi:

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்ததாக இன்று அறிவிக்கப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் இன்று காலை 6 மணிக்கு தூக்கிலடப்பட வேண்டிய நிலையில், நேற்று மாலை அடுத்த உத்தரவு வரும் வரையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்தது. 

4 பேரில் 2 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்னும் 2 பேர் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. வினய் சர்மாவின் கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தான் தூக்கு நிறைவேற்றம் தள்ளிப்போனது.

முறைப்படி குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 22-ம்தேதி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குற்றவாளி முகேஷ் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பி அது நிராகரிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுவது பிப்ரவரி 1-ம்தேதிக்கு மாற்றப்பட்டது. 

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பிப்ரவரி 1-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது எனினும், அதுவும் தள்ளிப்போயுள்ளது. 
 

.