This Article is From Oct 24, 2018

சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தனா மீதான புகார்களை விசாரிக்க புதிய குழு அமைப்பு

சிபிஐ இயக்குனராக தற்காலிக பொறுப்பை ஏற்றிருக்கும் நாகேஸ்வர ராவ் இந்த புதிய விசாரணை குழுவை அமைத்துள்ளார்.

சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தனா மீதான புகார்களை விசாரிக்க புதிய குழு அமைப்பு

லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்து அஸ்தனா மீது கடந்த அக்டோபர் 15-ம் தேதி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

New Delhi:

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பி உள்ளது. அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவை சிபிஐ-யின் தற்காலிக இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று நள்ளிரவு 1:45-க்கு அவர் தற்காலிக சிபிஐ இயக்குனராக நியமம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நாகேஸ்வர ராவின் உத்தரவின்பேரில் அஸ்தனா மீதான புகார்களை விசாரிக்க புதிய குழு ஒன்று ஏற்படத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக சதீஸ் தாகர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர்,தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் சிங் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வந்தார். இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் பலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

முன்பு தாகர் விசாரித்து வந்த இடத்தில் ஏ.கே. பாஸி நியமிக்கப்பட்டுள்ளார். இணை இயக்குனர் பொறுப்பு வி. முருகேசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த 
அதிகாரி சாய் மனோகர் சண்டிகார் போலீசின் இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இறைச்சி ஏற்றுமதியாளர் மொய்ன் குரேஷி தொடர்பான வழக்கை விசாரித்து வந்த அஸ்தனா அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ரூ. 2 கோடியை லஞ்சமாக பெற்றார் என்று சிபிஐ தரப்பில் குறறம்சாட்டப்பட்டுள்ளது. 

.