This Article is From Apr 14, 2019

கல்வி கற்க வயது தடையில்லை என நிரூபித்த அர்ஜெண்டினாவின் மூதாட்டி..!!!

வாசிக்கவும் எழுதவும் கற்று கொண்ட இசேபியா விரைவில் கணினியையும் உபயோகிக்க கற்று கொள்ள இருக்கிறார்.

கல்வி கற்க வயது தடையில்லை என நிரூபித்த அர்ஜெண்டினாவின் மூதாட்டி..!!!

99 வயதில் பள்ளியில் சேர்ந்துள்ளார் இசேபியா

கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என அர்ஜெண்டினாவை சேர்ந்த 99 வயதான மூதாட்டி நிரூபித்துள்ளார். இசேபியா லியோனார் கார்டல் தன் சிறு வயதில் பள்ளி கல்வியை பாதியில் நிறுத்த நேர்ந்தது. அதன் பின் தாயின் இறப்பு மற்றும் வேறு சில காரணங்களால் இசேபியாவால் பள்ளி கல்வியை தொடர முடியவில்லை.

சிறு வயதில் கற்க தவறிய பள்ளி கல்வியை முதுமையில் கற்க எண்ணிய இசேபியா, அடல்ட்ஸ் ஆப் லப்ரிடா பள்ளியில் சேர்ந்தார்.

ஸ்பட்னிக் நியூஸ் தெரிவிக்கையில், '98 வது வயதில் பள்ளியில் இணைந்த இசேபியா, இதுவரை ஒருநாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்கவில்லை.

‘முதுமையில் பல விஷயங்களை நாம் மறந்து விடுவோம். பள்ளி அட்டவணை எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் எழுதவும் வாசிக்கவும் எனக்கு கடினமாக உள்ளது' என ஸ்பட்னிக் நியூஸிடம் இசேபியா தெரிவித்தார்.

வாசிக்கவும் எழுதவும் கற்று கொண்ட இசேபியா விரைவில் கணினியையும் உபயோகிக்க கற்று கொள்ள இருக்கிறார்.

இசேபியாவின் இந்த செயல் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. முதுமையிலும் கற்க வேண்டும் என்ற இசேபியாவின் எண்ணத்தை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Click for more trending news


.