"அரசாங்க தலையீடு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்": புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் மோடி!

“இந்த கல்விக் கொள்கை மூலமாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைக்கப்படுகிறார்கள். அதிக அளவில் மாணவர்களும் இதில் இணைவார்கள்.” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

New Delhi:

புதிய கல்வி கொள்கை படிப்பிற்கு பதிலாக கற்றலில் அதிக கவனம் செலுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கல்வி கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றியுள்ளார்.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020க்கு எதிராக எதிர்ப்பும் ஆதரவும் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்க்கப்படுவதால் புதியக் கல்விக்கொள்கை பரவலாக எதிர்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேசிய கல்வி கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் மேற்குறிப்பிட்ட கருத்தினை கூறியுள்ளார். மேலும், நாட்டின் கனவுகளை பூர்த்தி செய்வதில் இந்த புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கின்றது என்றும் மோடி கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் கல்வி முறையின் பொறுப்போடு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம், இதில் அதன் தலையீடு குறைந்த அளவே இருக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Newsbeep

“இந்த கல்விக் கொள்கை மூலமாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைக்கப்படுகிறார்கள். அதிக அளவில் மாணவர்களும் இதில் இணைவார்கள்.” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

'உயர்கல்வியை மாற்றுவதில் NEP-2020 இன் பங்கு' என்ற தலைப்பில், இந்த மாநாட்டை கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது, மேலும் அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.