This Article is From Jul 24, 2019

மும்பையில் கடும் மழை ; ரயில்கள் தாமதம், தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை

Mumbai rain: மும்பை மற்றும் பால்கர், தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மும்பையில் கடும் மழை ; ரயில்கள் தாமதம், தயார் நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை

அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

Mumbai:

நேற்று நள்ளிரவு முதல் மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரத்தில் 170 மி.மீக்கும் அதிகமாக  மழை பதிவாகியுள்ளதாக பிரஹன் மும்பை மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு தெரிவித்துள்ளது. புறநகர் பகுதிகளி 58.2 மி.மீ மழை வடக்கு மும்பையில் சியானில் பதிவாகியுள்ளது. சியான் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் தடங்கள் நீரில் மூழ்கின. குர்லா மற்றும் சியான் நிலையங்களுக்கு இடையே பிரதான பாதையில் 10-15 நிமிடங்கள் தாமதமாக பயணிக்க ரயில்வே அறிவுறுத்தியது. 

சில பேருந்து வழித்தடங்களூம் திருப்பி விடப்பட்டன. சாண்டாக்ரூஸ், கோரேகான், மலாட், குர்லா மற்றும் சியான் போன்ற இடங்களில் உள்ள முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தன.

 இருப்பினும் நகரின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன

மும்பை மற்றும் பால்கர், தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி  மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இந்திய வானிலை அதிகாரி “சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாதுகாப்புப் படைகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படைகளுக்கு இது குறித்து தகவல்கள் அனுப்பப்படுகிறது” என்று தெரிவித்தார்

மும்பையில் 3 கார்கள் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர். மேற்கு மும்பையின் அந்தேரியில் இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது. 10 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது, நகரின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


ஜூலை 2ஆம் தேதி மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் மழையினால் சுவர் இடிந்து 20 பேர் பலியாகினர். தானே மாவட்டத்தில் கல்யாண் என்னுமிடத்தில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகினர்.

.