This Article is From Dec 18, 2018

''பெய்ட்டி'' புயல் பாதிப்பு - ஆந்திரா, ஒடிசாவில் 11 ஆயிரம்பேர் வெளியேற்றம்

புயல் வலு குறைந்த நிலையிலும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது.

''பெய்ட்டி'' புயல் பாதிப்பு - ஆந்திரா, ஒடிசாவில் 11 ஆயிரம்பேர் வெளியேற்றம்

ஆந்திராவில் நேற்று மாலை பெய்ட்டி புயல் கரையை கடந்திருக்கிறது.

Bhubaneswar:

பெய்ட்டி புயல் ஆந்திராவில் கரையை கடந்துள்ள நிலையில், வலு குறைந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழையை அளித்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாவட்டங்களில் இருந்து சுமார் 11 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெய்ட்டி புயல் ஆந்திராவின் கட்ரேனிகோனாவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 85 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதில் தள்ளரேவு, மல்கிபுரம் மாவட்டங்களில் ஏராளமான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

உயிரிழப்புகள் இதுவரை ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தற்போது வரை 11,600 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.'' என்று தெரிவித்தார்.

ராயகடா, கோராபுத், மல்கங்கரி, நபரன்பூர், கல்ஹாந்தி, கந்தமால், நுவாபடா, பர்கர், போலங்கிர், ஜர்சுகுடா, சம்பல்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.