உத்தரப்பிரதேசத்தில் குரங்குகளால் கொல்லப்பட்ட முதியவர்

குரங்குகளால் கொல்லப்பட்ட முதியவரின் உறவினர்கள் குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் குரங்குகளால் கொல்லப்பட்ட முதியவர்

கற்களை வீசி முதியவரை கொன்றதாக இன்னொரு உறவினர் தெரிவித்துள்ளார்.

Baghpat:

உத்தரப்பிரதேச மாநிலம் பக்பாத் நகரில் உள்ள கிராமம் ஒன்றில் குரங்கு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்குள்ள திக்ரி என்ற கிராமத்தில் குரங்குகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி 70-வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தனது வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்தார். அவரது அருகே செங்கல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த குரங்குகள் செங்கல் குவியல் மீது ஓடியாடி விளையாட ஆரம்பித்தன.

இதனால் செங்கற்கள் முழுவதுமாக சரிந்து முதியவர் மீது விழத் தொடங்கியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதற்கிடையே முன்பு ஒருமுறை குரங்குகளை தாக்கியதால், அவை கூட்டமாக திரண்டு வந்து முதியவர் தரம்பாலை கல் வீசி கொன்றதாக இன்னொரு உறவினர் கூறியுள்ளார். இந்த நிலையில் குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்த முதியவரின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News