திமுக இளைஞரணியின் செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் முறையாக கட்சியில் பதவியை பெறுகிறார் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திமுக இளைஞரணியின் செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்


Chennai: 

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்முறையாக கட்சி பொறுப்பு வழங்கப்பட உள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அதிமுக அரசையும், மத்தியில் உள்ள பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார். 

cjqojcs

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றால் ஒரே குடும்பத்தில்  கட்சியின் மிக முக்கிய பதவிகளைப் பெற்ற 4வது நபராக இருப்பார். 

கடந்த மாதம், முந்தைய திமுக இளைஞரணியின் செயலாளர் தனிப்பட்ட காரணங்களை கூறி பதவியை ராஜினாமா செய்து விட்டார். 

உதயநிதி ஸ்டாலின் முறையாக கட்சியில் பதவியை பெறுகிறார் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................