என்னே ஒரு சின்சியர்…! மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு குவியும் பாராட்டு

ட்விட்டரில் வைராலாக பரவி வரும் இந்த புகைப்படம் ‘லைக்ஸினை’ குவித்து வருகிறது.

என்னே ஒரு சின்சியர்…! மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு குவியும் பாராட்டு

கேள்வி நேரத்தில் கலந்து கொள்ள அவசரமாக ஓடினார்.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேள்வி நேரம் தொடங்கியதும்  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள  நாடாளுமன்றத்திற்கு வேகமாக ஓடினார். பியூஸ் கோயல்  ஓடிய புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகியுள்ளன. பியூஸ் கோயலின் அர்ப்பணிப்பினை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். 

செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ் படி பியூஸ் கோயல் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ள அவசரமாக ஓடியதாக தெரிவிக்கிறது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமைச்சர்கள் இல்லாதது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பியூஷ் கோயல் கேள்வி நேரத்திற்கு சரியாக செல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் ஓடிச்செல்லும் கட்சி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 

பாஜகவின் சுரேஷ் நகுவா கோயலின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

பல ட்விட்டர் பயனர்கள் 55 வயதான மத்திய அமைச்சரை பாராட்டியுள்ளனர். 

ட்விட்டரில் ஒருவர் “இது உங்கள் பணிக்கான உங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது”  என்று எழுதியுள்ளார். 

இன்னொருவர் வேலையே வழிபாடு என்று பாராட்டினார்.

ட்விட்டரில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படம் ‘லைக்ஸினை' குவித்து வருகிறது. 

Click for more trending news


More News