கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு!

பெங்களூர் வயாலிக்காவல் அருகே உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ முனிரத்னாவின் வீட்டிற்கு அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு!

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Bengaluru:

பெங்களூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெங்களூர் வயாலிக்காவல் பகுதியில் வசித்து வருகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ முனிரத்னா. இவரது வீட்டிற்கு அருகே இன்று காலை 9 மணி அளவில் குண்டுவெடித்துள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து முனிரத்னா கூறும்போது, குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தேன். உடனடியாக நாம் தகவல் தெரிவிக்க வேண்டும், அதுதான் ஜனநாயக கடமை என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தலைமை காவல் ஆணையர் சுனீல் குமார் கூறும்போது, வெடிமருந்தின் எஞ்சியுள்ள மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவத்தின் போது அவ்வழியே நடந்து சென்ற வெங்கடேஷ் என்பவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என்று அவர் கூறினார்.

More News