This Article is From Feb 05, 2019

உலகம் சுற்ற பணம் வேண்டி தெருவில் குழந்தையை சுழற்றிய ரஷ்ய தம்பதி!

28 வயதான கணவனும், 27 வயதான மனைவியும் கையில் குழந்தையை வைத்து சுற்றி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தனர்

உலகம் சுற்ற பணம் வேண்டி தெருவில் குழந்தையை சுழற்றிய ரஷ்ய தம்பதி!

90 நொடி ஓடும் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலானது. பாடலுக்கு ஏற்ற வாறு குழந்தையை சுற்றுவது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது. 

Kuala Lumpur, Malaysia:

ரஷ்யாவை சேர்ந்த கண‌வன் மனைவி இருவரும் சேர்ந்து உலக சுற்றுலா செல்வதற்கு நிதி திரட்டுவதற்காக தங்களது நான்கு மாத குழந்தையை கையில் வைத்து சுழற்றியுள்ளனர். அதனால் அவர்களை மலேசிய போலிஸ் கைது செய்துள்ளது. 

28 வயதான கணவனும், 27 வயதான மனைவியும் கையில் குழந்தையை வைத்து சுற்றி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வந்தனர். இதனை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்த்தியுள்ளனர். 

அவர்களை கைது செய்த போலிஸார் ''நாங்கள் அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம்" என்று கோலாலம்பூர் போலிஸ் தலைமை அதிகாரி மஸ்லான் லஸிம் தெரிவித்துள்ளார். 

90 நொடி ஓடும் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலானது. பாடலுக்கு ஏற்ற வாறு குழந்தையை சுற்றுவது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது. 

கணவர் குழந்தையை சுழற்ற மனைவி தரையில் ஒரு பலகையுடன் அமர்ந்திருந்தார் . அதில் "நாங்கள் உலகம் சுற்றப்போகிறோம்" என்று எழுதியிருந்தது.

அருகில் இருந்த சிலரும் இது முட்டாள் தனமானது என எச்சரித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து மலேஷியா வந்து இந்த செயலை அந்த ரஷ்ய ஜோடி செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

.