This Article is From Oct 13, 2018

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்! - சட்டீஸ்கரில் காங்.,க்கு பெரும் பின்னடைவு!

சட்டீஸ்கரில் விரைவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் ராம் தயாள் பாஜகவில் இணைந்தார்.

Bilaspur, Chhattisgarh:

மாநிலத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராம் தயாள் பிஜேபியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த ராம் தயாள் பிஜேபி கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னணியில் கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து சட்டீஸ்கர் காங்கிரஸ் தலைவர், பூபேஷ் பாகல் என்டிடிவியிடம் கூறும்போது, சிறுது நாட்களுக்கு முன்னதாக கூட ராம் தயாளை நாங்கள் சந்தித்தோம், அப்போது அவர் எங்களிடம் எதுவும் கூறவில்லை. தேர்தலில் நேரத்தில் அரசியல்வாதிகள் கட்சிகள் மாறுவது அசாதாரணமானது அல்ல என்றார்.

சட்டீஸ்கர் தேர்தலுக்காக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தேர்தல் கமிட்டியினர், நேற்று வேட்பாளர்களையும் இறுதி செய்து வைத்திருந்தனர், அவர்களது பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது என கட்சியினர் கூறுகின்றனர்.

சட்டீஸ்கரில் கடந்த மாதம் காங்கிரஸ் மாநில தலைவர் ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கி சிறைக்கு சென்றது காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராம் தயாள் பாஜக கட்சியில் இணைந்திருப்பது காங்கிரஸூக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 

.