சென்னை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை

விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்னை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை

மாணவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஹைலைட்ஸ்

  1. எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தவர்
  2. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்
  3. தற்கொலை குறித்து போலீசார் விசாரணை

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோபால் பாபு என்ற அவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். எம்.டெக். முதலாம் ஆண்டு படிப்பை ஐ.ஐ.டி.யில் அவர் படித்து வந்திருக்கிறார். 

பிரம்மபுத்திரா விடுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''திங்களன்று இரவு தற்கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இதுபற்றி விடுதி நிர்வாகிகள் எங்களுக்கு தகவல் அளித்தனர். பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்றார். 

முன்னதாக இந்த மாதத்தில் பி.எச்.டி. பயிலும் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................