This Article is From Dec 17, 2019

ராணுவத் தளபதியாக மனோஜ் முகுந்த் நாராவனே நியமனம்

சேனா விருது, விசிஷ்ட் சேவா விருது, ஆதி விசிஷ்ட் விருது, பரம் விசிஷ்ட் சேவா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

லெப்டினெண்ட் ஜெனரல் நாரவனே செப்டம்பர் மாதம் ராணுவ பணியாளர்களின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.

New Delhi:

ராணுவத் தளபதியாக பணியாற்றி வரும் பிபின் ராவத் இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுவதையொட்டி புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நாராவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

லெப்டினெண்ட் ஜெனரல் நாரவனே செப்டம்பர் மாதம் ராணுவ பணியாளர்களின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார். முன்னதாக கிழக்கு கமெண்டிங் அதிகாரியாக சீனாவின் இந்தியாவின் கிட்டத்தட்ட 4,000கி.மீ எல்லையை கவனித்துக் கொள்ளும் ராணுவ குழுவுக்கு தலைமை தாங்கினார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர். 1980இல் 7வது பட்டாலியன் தீ சீக் லைட் காலாட்படை படைபிரிவுக்கு நியமிக்கப்பட்டார். 

தனது நாற்பாதாண்டு கால நீண்ட ராணுவ வாழ்க்கையில் லெப்டினெண்ட் ஜெனரல் நாரவனே வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றியுள்ளார். ஆபரேஷன் பவன் இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு அங்கமாகவும் இருந்தார். மியான்மரில் உள்ள இந்திய தூதராகமாக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 

சேனா விருது, விசிஷ்ட் சேவா விருது, ஆதி விசிஷ்ட் விருது, பரம் விசிஷ்ட் சேவா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

.